Thursday, 15 March 2012

உதகமண்டலம்


ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்தியமாநிலமான தமிழத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின்தலைநகரமுமாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது
மக்கள் வகைப்பாடு:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 93,921 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். உதகமண்டலம் (ஊட்டி) மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உதகமண்டலம் (ஊட்டி) மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு:
12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.
அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார். ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.


உதகமண்டல ஒளிக்காட்சி அரங்கு::::
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Ooty_houses.jpg/120px-Ooty_houses.jpg உதகமண்டல வீடுகள்
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/A_scene_of_botanical_garden_Ooty.jpg/120px-A_scene_of_botanical_garden_Ooty.jpg தாவரவியல் பூங்காhttp://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/A_scene_of_botanical_garden_Ooty_1.jpg/90px-A_scene_of_botanical_garden_Ooty_1.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/NMR_up_train_at_Kateri_Road_05-02-28_04.jpeg/120px-NMR_up_train_at_Kateri_Road_05-02-28_04.jpeg நீலகிரி மலை இரயில்
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/A_Landscape_of_Ooty1.jpg/120px-A_Landscape_of_Ooty1.jpg மலைக்காட்சிhttp://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/A_Landscape_of_Ooty10.jpg/120px-A_Landscape_of_Ooty10.jpg


No comments:

Post a Comment