Tuesday, 27 December 2011

நீலகீரி பல்லுயிர்பெருக்கம்


நீலகிரி பல்லுயிர் வலயம் தென்னிந்தியாவில் மேற்குத் தொர்ச்சி மலையில் நீலகிரிப் பகுதியில் அமைந்துள்ள ஒர் பன்னாட்டு பல்லுயிர் வலயம் ஆகும். இந்த பல்லுயிர் வலயத்துடன் இணைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி உள்ளமைப்பை (6,000+ கிமீ²) யுனெசுகோ நிறுவனத்தின் உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க ஆய்வு செய்து வருகிறது.

அமைவிடம்
தமிழ்நாட்டில் (2537.6 கிமீ²),கர்நாடகாவில் (1527.4 கிமீ²) மற்றும் கேரளாவில் (1455.4 கிமீ²) பரவியுள்ள இந்த பல்லுயிர் வலயத்தின் மொத்தப் பரப்பளவு 5,520 கிமீ² ஆகும். நீலகிரி மேட்டுநிலத்தினை முழுமையாக அடக்கியுள்ளது.

பாதுகாக்கப்பட்டப் பகுதிகள்
      முதுமலை வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா (321.1 கிமீ²), வயநாடு வனவிலங்கு உய்வகம்( 344கிமீ²), பந்திப்பூர் தேசியப்பூங்கா(874கிமீ²), நாகரஹோளே தேசியப் பூங்கா (643 கிமீ²), நுகு வனவிலங்கு உய்வகம், முக்கூர்த்தி தேசியப் பூங்கா (78 கிமீ²) மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (89.52கிமீ²) ஆகியன இந்த வலயத்தினுள் அடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகும். தவிர சுற்றுலா மற்றும் வனத்துறைக்குட்பட்ட தமிழக நீலகிரி மாவட்டம் (வடக்கு(448.3 கிமீ²) தெற்கு (198.8 கிமீ²)), ஈரோடு மாவட்டம் (சத்தியமங்கலம் வனப்பகுதியும் (745.9 கிமீ²) ஈரோடு(49.3 கிமீ²)) மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் (696.2 கிமீ²) வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த வலயத்தின் மேற்குச்சரிவுகளில் கூடுதலாக மழை பெய்து பசுமையான ஈரக்காடுகளும் மற்றும் கிழக்குச்சரிவுகளில் குறைந்த மழை பெறும் உலர்காடுகளும் உள்ளன. ஆண்டுக்கு 500 மிமி முதல் 7000 மிமி வரை மழை பெய்கிறது. இந்த வலயத்தினை மூன்று சுற்றுசூழல் பகுதிகளாகப் பிரிக்கலாம்:
  • தென்மேற்குத் தொடரின் ஈர இலையுதிர்க் காடுகள்
  • தென்மேற்குத் தொடரின் மான்ட்டேன் மழைக்காடுகள்
  • தென் தக்காண மேட்டுநில உலர் இலையுதிர் காடுகள்
இக்காடுகளில் மான்ட்டேன் மழைக்காட்டு மரங்கள்,பசும் ஈரக் காட்டுமரங்கள், முள்மரங்கள்/முற்செடிகள், மான்ட்டேன் புல்வெளிகள், மலையுச்சி ஷோலா காட்டு மரங்களைக் காணலாம்.

வனவிலங்குகள்
  • இப்பகுதியில் 100 வகையான பாலூட்டிகள்
  •  350 வகையான பறவைகள்
  •  80 வகையான ஊர்வன
  • 39 வகையான மீன்கள்
  • 31 வகையான நிலநீர்வாழிகள் வாழ்கின்றன.
  • 316 species of butterflies  எண்ணிலடங்கா பூச்சி வகைகளும் காணக்கிடைக்கின்றன.
  • இங்குள்ள அரிதாகி வரும் விலங்குகள் புலி, ஆசிய யானை, நீலகிரி டாஹ்ர் ஆகும்.
தாவரங்கள்







இங்கு பல்வகை தாவரங்கள் அடர்ந்துள்ளன. இங்குள்ள 3300 வகைகளில், 1232 இங்கு மட்டுமே காணப்படுபவை. Baeolepisவகை இங்கு மட்டுமே காணப்படுகிறது. இங்கு மட்டுமே காணப்படும் பிற வகைகள் Adenoon, Calacanthus, Baeolepis, Frerea, Jarodina, Wagotea மற்றும் Poeciloneuron. இங்குள்ள 175 ஓர்கிட் வகைகளில் 8 இவ்வலயத்திற்கே உரியவை. அவற்றில் அரிதாகிவரும் வகைகள்: Vanda, Liparis, Bulbophyllum, Spiranthes மற்றும் Thrixspermum.

No comments:

Post a Comment