Thursday, 15 March 2012

இமயமலை


இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்த இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர்உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது.
உலகின் ஒப்பற்ற மிக உயர்ந்த கொடுமுடியாகிய எவரெஸ்ட் சிகரம் இவ் இமயமலையிலேயே உள்ளது. இவ்விமையமலைத் தொடர் எத்தனையும் பெரிய மலைத்தொடர் என்றால், இத்தொடரிலே 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் 7,000 மீட்டரையும் மீறியப் பேருயர் தனிமலைகள், கொடுமுடிகள் உள்ளன. ஆனால் இவ்விமய மலைத்தொடரைத் தவிர்த்து எஞ்சி உள்ள இப்பெருநில உலகில் ஒருமலையும் கூட 7,000 மீட்டர் உயரத்தை மீறி இல்லை. தென் அமெரிக்காவிலே அர்ஜெண்டைனாவிலே உள்ள அக்கோன்காகுவாபெருமலைதான் அடுத்த மிகப்பெரிய மலை (6,962 மீ உயரம்). இமயமலைத் தொடர் மிகப்பெரிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக 2,400 கி.மீ தொலைவு நீண்டு விரிந்துள்ளது.
இமயமலையின் அண்மை பகுதிகளேயே தெற்கு ஆசியாவின் தொன்மையான சமயங்களான இந்து மதம், புத்த மதம் உருவாகி வளர்ச்சியடைந்தது..
இமயமலைத் தொடர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,இந்தியா. சீனா, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் வழியாக அமைந்துள்ளது.

இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகள்:

இமயமலையின் பெரும்பாலான பகுதிகள பனிமலையால் சூழப்பட்டுள்ளன. இந்த பனிமலைகளிலிருந்து பல மிகப்பெரிய ஆறுகள் உருவாகுகிற்து. சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்ரா, ஐராவதி மற்றும் யாங்சிகீ போன்ற ஆறுகள் முதன்மையானவைகளாகும்.

வரலாற்றில் இமயமலையின் பங்கு

இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தின் மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்தில்ருந்து பிரிக்கின்றது. உதாரண்மாக செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.

தமிழ் - சங்க இலக்கியங்களில் இமயம்

  • சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான் \ அகம் 127
  • வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் 'வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு' கொண்டது \ புறம் 39
  • வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன் \ சிறுபாணாற்றுப்படை 48-
  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். \ பதிற்றுப்பத்து பதிகம் 2
  • இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். பதிற்றுப்பத்து - 2ஆம் பத்து - பாடல் 11
  • வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் \ பதிற்றுப்பத்து 43
  • கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும் \ புறம் 34
  • இமயம் போல உயர்ந்து வாழ்க \ புறம் 166
  • வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும் \ புறம் 132
  • தலைவி ஒருத்தி தன் காதலனை இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள் \ குறுந்தொகை 158
  • அரவணையான் புகழ் இமயத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த்துகிறார். \ கலித்தொகை 105
  • தென்கடல் பரப்பில் மேய்ந்த அன்னப் பறவை இமயமலையிலுள்ள வானர மகளிரிடம் இருப்புக் கொள்ளுமாம். அதுபோல, என் காதலியை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுப்பவர்கள் என்றேனும் ஒருநாள் கொடுப்பார்கள் என்கிறான் தலைமகன் ஒருவன். \ நற்றிணை 356
  • பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர் \ புறம் 369
  • என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி \ நற்றிணை 369
  • அந்தி வேளையில் அலையாமல் ஓரிடத்தில் தங்கும் விலங்கினம் போல ஆயத்தோடு ஆற்றுத்துறை மணல்மேல் ஒரிடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நல்லவரைப் பார்த்தேன் என்று பரத்தைமாட்டுச் சென்ற தன் தலைவனைப்பற்றி ஒருத்தி குறிப்பிடுகிறாள் \ கலித்தொகை 92
  • நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். \ அகம் 265
  • சிவன் திரிபுரம் எரித்தபோது இமயம் அவனுக்கு வில்லாயிற்று. -கதை \ பரிபாடல் திரட்டு 1
  • இமயத்தை வில்லாக்கிக்கொண்ட சிவன் கதை பேசப்படுகிறது \ கலித்தொகை 38
  • அந்தி வந்ததும் அந்தணர் தம் கடமையாக முத்தீ வளர்க்கும் இடங்களுள் ஒன்று இமயம். மற்றொன்று பொதியில். அந்த முத்தீ விளக்கொளியில் பெரிய பெண்மான் உறங்குமாம். இந்த இரு மலைகளையும் போலப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் உயர்விலும், புகழிலும் நடுக்கம் இல்லாமல் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார் \ புறம் 2
  • திருபரங்குன்றம் புகழால் இமயக் குன்றுக்கு ஒப்பானது \ பரிபாடல் 8
படிமம்:Himalayas.jpg

 

இந்திய காண்டாமிருகம்


இந்திய காண்டாமிருகம்இந்திய மூக்குக்கொம்பன் அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின்அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன. நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்ப்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008ல் கணக்கிடப்பட்டுள்ளது.
ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். இதனை 1758ஆம் ஆண்டு கரோலசு லின்னேயசு வகைப்படுத்தி ஆங்கிலத்தில் "Rhinoceros" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் "rhino" என்றால் மூக்கு என்றும் "ceros"' என்றால் கொம்பு என்றும் பொருள்படும். தமிழில் இதற்கு மூக்குக்கொம்பன் என்று பெயர்.

பழக்கவழக்கங்கள்:

சமூகவாழ்க்கை

இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.
அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.

உணவு

இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.

இனப்பெருக்கம்

இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும்.
இவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்னை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும்.
தாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுக்கொள்ளும்.

காப்புநிலை

இந்திய காண்டாமிருகத்தை வேட்டையாடுதலைக் காட்டும்முகலாயர் கால ஓவியம்
ஒரு காலத்தில் சிந்து சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்திய காண்டாமிருகம், தற்போது அசாமில் உள்ள பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நேப்பாளத்தில் உள்ள சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டும் தென்படுகிறது.[37] இந்திய மற்றும் நேபாள அரசுகள் இந்திய காண்டாமிருகத்தைக் காப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன போதிலும் கள்ளச்சந்தையில் மிக அதிகமான விலைக்கு விற்கும் காண்டாமிருகத்தின் கொம்பினால், அடிக்கடி இவ்விலங்கு கொல்லப்படுகிறது. கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பரிய வைத்தியங்களில் இக்கொம்பு அதிகமாக உபயோகிக்கப்ப்டுகிறது. 1983ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ஆண்டிற்குள் அசாமி்ன் காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 235 இந்திய காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. கொம்பை வெட்டி எடுப்பதற்கு முதலில் விலங்கின் மீது மின்சாரம் பாய்ச்சியோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை கொடுத்தோ விலங்கைக் கொன்று பின் கொம்பை அறுத்துவிடுகிறார்கள்.
இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்ட உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க இந்தியா மற்றும் நேபாளத்தில் பல்வேறு மீள்அறிமுகப்படுத்தி விலங்கின் பரவலை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றது.மீள்அறிமுகப்படுத்திய உயிர்தொகை இந்தியாவில் துவ்வா தேசிய பூங்காகாவிலும், நேபாளத்தில் ராயல் பரிடியா தேசிய பூங்கா மற்றும் ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றனபடிமம்:Indian Rhino (Rhinoceros unicornis)1 - Relic38.jpgபடிமம்:Kazi rhino edit.jpg

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்


மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகிறது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.
இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

பரவல்

இம்மலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளாஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில்ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப் படுகிறது.
இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.

புவியியல்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆண்டுவாரி மழை அளவைக் காட்டும் வரைபடம்.
இந்த மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது மற்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது.

ஆறுகள்

சோக் அருவி- இந்தியாவின் மிகப்பெரிய அருவி
தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு. ஆகும்.
படிமம்:Western-Ghats-Matheran.jpgபடிமம்:Varandha ghad.jpg
இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. மகராட்டினத்தில் உள்ள கோபாளி அணை, கோய்னா அணை. கேரளாவில் உள்ள பரம்பிகுளம் அணை. தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைகட்டு போன்றவை குறிப்பிடததகுந்தவைகளாகும்.
படிமம்:Dud sagar.jpg
பறவைகள் மற்றும் விலங்குகள்:

தஞ்சை பெரியக்கோயில்



தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில்,சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில்என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.

கோயில் அமைப்பு

சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.
தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்
இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(Axial)மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்ற்ன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.
மேலேயும் கீழேயும் பத்மதளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.

கல்வெட்டுக்கள்

இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
தஞ்சை பெரிய கோயில், இன்னொரு தோற்றம்
கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர,சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.
ஆலயத்தினைப் பற்றி அதன் வாயிலில் உள்ள செய்திப்பலகை
இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

நந்தி

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சை பெரியகோவில் உருவம் பதித்த தபால் தலை

Tanjai stamp.jpg
மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது

ஆயிரம் ரூபாய் நோட்டு

Tanjai1000.jpg
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி Indian Rupee symbol.svg 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

ஆயிரமாண்டு நிறைவு விழா

சதயத்திருவிழாத் தோற்றம்
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.
Rajarajancoin.jpg
மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முதல்-அமைச்சர் மு. கருணாநிதிமுன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.
விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது